சீனாவில் 56 வயதான ஒரு நபரின் வயிற்றில் இருந்து சுமார் 1.3 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கல்லை மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
கடந்த 3 வருடங்களாகவே அவர் சிறுநீர் கழிப்பதற்குப் பயங்கரமாகக் கஷ்டப்பட்டு வந்துள்ளார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல பயந்துகொண்டு, அவராகவே வீட்டிலேயே கைவைத்தியம் பார்த்து நேரத்தைக் கடத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாத அளவுக்கு உச்சத்துக்கே செல்ல, வேறு வழியே இல்லாமல் பயந்துகொண்டே மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவரது வயிற்றில் இருந்த ராட்சத கல்லைக் கண்டு அதிர்ந்துபோய் உடனடியாக ஆபரேஷன் செய்து அதை வெளியே எடுத்து அவருக்குப் புது வாழ்வு கொடுத்துள்ளனர்.
