மேற்காசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி என்பது அனைவருக்கும் திறந்திருக்கும் ஒரு சர்வதேசக் கடல் பகுதி என்றும், இதை எந்த ஒரு தனி நாடும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், ஓமன் நாடு மற்ற நாடுகளைப் போலப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அதை அமெரிக்கா அழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் மிகக் காரசாரமாக எச்சரித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் தனது அதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஈரான், புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதன்படி, அந்த கடல் வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலித்து, அந்த வருவாயை ஓமனுடன் பகிர்ந்து கொள்ள ஈரான் திட்டமிட்டுள்ளது.

ஈரானின் இந்த அதிரடித் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓமன் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இந்த இறுதிக்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.