மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பெயரும் இல்லாமல், முகவரியும் இல்லாமல், “கண்டா வர சொல்லுங்க; எங்க தொகுதி எம்பி.,-ஐ காணோம்” என மொட்டையாக ஒரு சில எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் போஸ்டர் அடித்து வருகின்றனர்.

ஆனால் தொகுதி மக்களின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டும், எதிர்க்கட்சி எம்.பி., ஆக இருந்து கொண்டு பெற்ற வெற்றிகளை புத்தகமாகவும் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அந்தப் போஸ்டர் முன்பு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.