உணவே மருந்து” என்ற ஆயுர்வேதக் கொள்கையை மெய்ப்பிக்கும் வகையில், 98 வயது மூதாட்டி ஒருவர் தனது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்கான ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். அமேசான் காடுகளின் ஒதுக்குப்புறமான கிராமத்தில் வசிக்கும் ‘அபுயேலா நைரா’ என்ற 98 வயது மூதாட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனக்கு இதுவரை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமே ஏற்பட்டதில்லை எனக் கூறும் அவர், அதற்குத் தான் பின்பற்றும் 4 இயற்கை வழிமுறைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

வயதான காலத்தில் பலரையும் வாட்டும் மூட்டு வலிக்கு நைரா ஒரு எளிய தீர்வை வழங்குகிறார். மஞ்சளையும் ஆலிவ் எண்ணெயையும் நன்றாகக் கலந்து, மூட்டுகளில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த கலவை தோலில் முழுமையாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்தால், மூட்டுகளில் வெப்பம் உருவாகி வலி நீங்குவதாக அவர் கூறுகிறார். குறிப்பாகக் குளிர் காலத்தில் இது சிறந்த பலனைத் தரும்.

 

View this post on Instagram

 

A post shared by Abuela Nayra (@abuela.nayra)

இதய நோய்களிலிருந்து தப்பிக்கவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் ‘பச்சை பூண்டு’ சிறந்த மருந்து என்கிறார் நைரா. அதன்படி பூண்டை நன்றாக நசுக்கி, 10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பின்னர் அதனை அப்படியே விழுங்க வேண்டும். இது ரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, இதயத்தைப் பாதுகாக்கும் கவசமாகச் செயல்படுகிறது.

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் குடல் ஆரோக்கியத்தைச் சார்ந்தது. இதற்காக அவர் ‘கொம்புச்சா’ என்ற புளித்த பானத்தைப் பரிந்துரைக்கிறார். தேநீர், சர்க்கரை, பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் பானம், செரிமான மண்டலத்தைச் சீராக வைக்க உதவுகிறது. கிராமவாசிகள் மட்டுமே அறிந்த ரகசிய முறையிலான தேநீராக இதனை அவர் அருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் உணவு முறைகள் மூலம் ஆரோக்கியத்தைப் பேண முடியும் என்றாலும், ஏதேனும் தீவிர நோய் பாதிப்பு உள்ளவர்கள் அல்லது புதிய உணவு முறைகளைப் பின்பற்றுபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என்பதைத்  நினைவுபடுத்துகிறோம்.