தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் கோபத்தைக் குறைக்க தான் செய்த காரியம் குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் ருசிகரமாகப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 2 ‘சூப்பர் ஓவர்கள்’ வரை ஆட்டம் நீடித்தும், இறுதியில் ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது. இது குறித்துப் பேசிய ரஷித் கான், “எனக்கு வேறு வழி தெரியவில்லை. அந்தத் தோல்வியால் ஏற்பட்ட கோபத்தைத் தணிப்பதற்காக, தந்துரி சிக்கன், பேஷ்வாரி வகை உணவுகள் மற்றும் தால் மக்னி ஆகியவற்றை ஆர்டர் செய்யுமாறு எங்கள் மேலாளரிடம் கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தோல்விக்குப் பிந்தைய தனது மனநிலையை அவர் வெளிப்படுத்திய விதம் விளையாட்டு ஆர்வலர்களிடையே வைரலாகி வருகிறது.