“எனக்கு ஓட்டுப் போடு, போடாமப் போ… ஆனா அந்த காங்கிரஸ், திமுக, பிஜேபி, அதிமுக-வுக்கு மட்டும் போட்டுறாத” என்று ஆலங்குளம் பிரச்சாரத்தில் சீமான் அதிரடியாக முழங்கினார். மக்கள் அறிவார்ந்த சமூகமாக மாறி, இந்தத் திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். வெறும் விளம்பரங்களுக்காக நடத்தப்படும் ‘ரோடு ஷோ’க்களைப் பார்த்து ஏமாந்துவிடக் கூடாது என்றும், அந்த மாயையில் மயங்கி தங்கள் வாக்குகளை மீண்டும் பழைய கட்சிகளிடமே அடகு வைத்துவிடக் கூடாது என்றும் அவர் மக்களை எச்சரித்தார்.
குறிப்பாக இளைஞர்களைப் பார்த்து, “தியேட்டர்ல விசில் அடிச்சிட்டு, அப்புறம் தெருவுலயும் விசில் அடிச்சு சுத்தி திரியாதீங்க; அறிவார்ந்த பிள்ளைகளா நடந்துக்கங்க” என்று தனது பாணியில் கடிந்து கொண்டார். சினிமா கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், நாட்டின் நிலைமையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். “புரியுதா? புரியுதாடா?” எனத் திரும்பத் திரும்பக் கேள்வி எழுப்பிய அவர், மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்பது நம் எதிர்காலத்திற்கே ஆபத்து என்பதை மிகத் தெளிவாகப் புரியவைத்தார்.
