புற்றுநோய் இருப்பதாகக் கூறி சுமார் 71 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த இளம் பெண் இன்ஃப்ளூயன்ஸர் ஒருவரின் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. தனக்குக் கடுமையான புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி சமூக வலைதளங்கள் மூலம் அந்தப் பெண் பொதுமக்களிடம் நிதி திரட்டியுள்ளார்.

மேலும் இவரது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட பலரும் வாரி வழங்கிய நிலையில், அந்தப் பணத்தைக் கொண்டு அவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். விலை உயர்ந்த பொருட்கள், சொகுசுப் பயணங்கள் என அவர் செய்த செலவுகளே இறுதியில் அவரது மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.

 

View this post on Instagram

 

A post shared by DoOnia Fouad (@doniaa_fouad)

“>

இதனால் போலீசாரின் விசாரணையில், தனக்கு உண்மையில் எந்த நோயும் இல்லை என்பதையும், “சும்மா வேடிக்கைக்காகவும், சொகுசு வாழ்க்கைக்காகவும்” மட்டுமே இவ்வாறு செய்ததாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு உயிர்க்கொல்லி நோயைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் நிதி உதவி கேட்கும் நபர்களின் பின்னணியை உறுதி செய்த பிறகே பொதுமக்கள் உதவ வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.