மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் இன்று மாலை தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடிய வெகு விமர்சன அரசியல் நிகழ்வாக களைகட்டியுள்ளது. மேடையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வரவேற்கப்பட்ட போது, அவருடன் அவரது பெற்றோரும் மேடையில் அமர்ந்தனர்.
தொடக்கமாக ரேம்ப் வாக் செய்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்திய விஜய், பின்னர் உரையாற்றினார். “எனக்கு இப்போ வேற வேலையும் இல்லை… வாழ்நாள் முழுக்க மக்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு எண்ணம் இல்ல” என உருக்கமாக தெரிவித்த அவர், கட்சியின் கடைசி தொண்டரின் நம்பிக்கையை பறைசாற்றினார்.
‘தவெக’ தன்னம்பிக்கையுடன் மக்களிடம் சென்று அடித்தளத்திலிருந்து வேரூன்றும் வகையில் செயற்படுகிறது. அத்துடன் முதல்வர் வேட்பாளராக விஜயை அறிவித்துள்ள கட்சி, விரைவில் கூட்டணிகளையும் அதிகாரப் பங்கீட்டையும் உறுதி செய்யும் நிலையில், இம்மாநாடு விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
