டெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் பொதுப் பெட்டியில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், பயணி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், வன்முறையைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உயிரிழந்த பயணியின் உடல் நீண்ட நேரம் பிளாட்பாரத்திலேயே கிடந்த போதிலும், அதைக் கூட யாரும் கண்டுகொள்ளாமல் சென்றது மனிதநேயமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது.

“>

இந்தக் கொடூரச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மக்கள் நெருக்கம் மிகுந்த ரயில் நிலையத்தில், பாதுகாப்புப் படையினரின் முன்னிலையிலேயே இவ்வளவு பெரிய வன்முறை நடந்தது பயணிகளின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட சவாலாக அமைந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, கடமை தவறியவர்கள் மீதும், குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.