இந்தியாவின் வாடகை கார்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள அவசர கால உதவி பொத்தான் முறையாக செயல்படவில்லை என்பதை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் இந்தியாவில் பயணம் செய்த போது, அந்த காரில் இருந்த அவசர பொத்தானை அழுத்தி சோதனை செய்துள்ளார்.

ஆனால், அந்த பொத்தான் எந்தவித சிக்னலையும் காட்டவில்லை. இதுகுறித்து அந்த கார் ஓட்டுநரிடம் கேட்டபோது, அவர் மிகவும் அலட்சியமாக “இங்கே எதுவும் இயங்குவதில்லை” என்று பதிலளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Rohit The HOD (@rohitsinghrathaur)

“>

மேலும் பெண்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு இத்தகைய வசதிகளை கட்டாயமாக்கியுள்ள நிலையில், நடைமுறையில் அவை வெறும் அலங்காரப் பொருட்களாக மட்டுமே இருப்பது இந்த வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக கார் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவசர காலத்தில் உயிரைக் காக்க வேண்டிய இந்த பாதுகாப்பு அம்சங்கள் செயலற்று இருப்பது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.