ஹரித்வாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சமூக வலைதளங்களில் புகழ்பெற்றாக வேண்டும் என்ற பேராசையில், தனது உயிரைப் பணயம் வைத்து 24 மணி நேரம் தண்ணீர் தொட்டிக்குள்ளேயே தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ‘லைக்ஸ்’ மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட இந்த விபரீதச் செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி அவர் மேற்கொண்ட இந்த முயற்சி, ஒருவேளை உயிரிழப்பிலோ அல்லது கடுமையான உடல்நலக் பாதிப்பிலோ முடிந்திருக்கக்கூடும் எனப் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
“>
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் ஒரு காரசாரமான விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர் தற்கால இளைஞர்கள் இணையப் புகழுக்காகத் தங்களின் உயிருக்குக் கூட மதிப்பளிக்காமல் இவ்வளவு தரம் தாழ்ந்து செல்வது கவலையளிப்பதாகக் கூறுகின்றனர்.
மேலும் இளைஞர்களின் இத்தகைய ஆபத்தான போக்குகளைத் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அது இளைஞர்களின் மனநிலையைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்வதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
