சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றது. பெண்களின் அடிமைத்தனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி தினந்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் சீரியலில் நாயகனாக இருந்த குணசேகரன் சமீபத்தில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவர் இறந்து சில தினங்கள் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்த காட்சிகள் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ காட்சியில் குணசேகரன் குரல் மாற்றப்பட்டுள்ள நிலையில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் ரசிகர்கள் கண்கலங்க கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.