நடிகர் மம்மூட்டியின் சகோதரி ஆமினா (நசீமா 70) வயது மூப்பு மற்றும் உடல்நல கோளாறு காரணமாக இன்று காலமானார். இவரது கணவர் காஞ்சிரப்பள்ளி பாறைக்கால் பகுதியை சேர்ந்தவர் மறைந்த பி எம் சலீம். ஆமினாவுக்கு மம்முட்டியை தவிர உடன்பிறந்தவர்கள் நான்கு பேர் உள்ளனர். இன்று காலை 10 மணி அளவில் இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மம்முட்டியின் தாயார் கடந்த ஏப்ரல் மாதம் காலமான நிலையில் ஆறு மாதத்தில் சகோதரியும் இயற்கை எய்திஉள்ள நிலையில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.