வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது செல்ல மகள் கிம் ஜு ஏ-வுடன் சேர்ந்து புதிய வகை போர் டாங்கியில் (Main Battle Tank) பயணித்த காட்சிகள் தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா தனது ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
இதில் தனது மகளுடன் கலந்து கொண்ட கிம், போர் டாங்கியை தானே ஓட்டி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார். நவீன ரக டாங்கிகளின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்த அவர், எந்த நேரத்திலும் எதிரிகளை எதிர்கொள்ள ராணுவம் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கிம் ஜாங் உன்னின் வாரிசாக பார்க்கப்படும் அவரது மகள், சமீபகாலமாக இது போன்ற முக்கிய ராணுவ நிகழ்வுகளில் அடிக்கடி பங்கேற்பது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
