சென்னையில் இன்று பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,

அதிமுக கூட்டணியில் இணைந்த தாள் தேமுதிகவுக்கு மாநிலங்களவை செய்து தருவதாக கூறினார்கள். ஆனால் “வாக்குறுதி கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி எங்களை ஏமாற்றிவிட்டார். வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பினோம், ஆனால் அவர் ‘முதுகில் குத்தி’ விட்டார்.”

இந்தச் கருத்து என்பது அவருடைய கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் அனுமதிக்கப்பது என்பதற்கும் ஒத்துப்போகும் வகையில் இருந்தது. “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட கூட்டணிக் ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திடுவார்கள். நாம் அதே முறைப்படி சந்தோஷமாக கூட்டணியில் நம்பிக்கை வைத்தோம்” என்றார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு மக்கள் காசு கொடுத்து அழைக்கப்படுவதாக கூறினார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணத்தை “வெற்றி பெற வாழ்த்துகள்” என்றும் அவர் கூறினார்.

இந்த உரை, தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட பரபரப்பை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பாக மாற்றக்கூடிய ஒரு முக்கிய நிகழ்வாக விளங்குகிறது.

மேலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணையும் என்று கூறப்படும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார் திமுக கூட்டணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.