அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் எனவும் இதனை பத்து நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி செய்யாவிடில் அந்த பணிகளை நானே செய்வேன் எனவும் கூறினார். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு தற்போது சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, சிந்தித்துப் பார்த்து செய்கையை திருத்திக்கோ என எம்.ஜி.ஆர் பாடல்களை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சி பதவியிலிருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது. இது அறிவார்ந்த செயல் இல்லை. இது கட்சிக்கும் உகந்தது கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையை நினைத்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.