டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது நடந்த இந்த வினோதமான வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. டிடிவி தினகரன் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்குப் பின்னால் நின்றிருந்த நிர்வாகி ஒருவர், திடீரென்று ஆக்ரோஷமாக “எடப்பாடிக்கு டெபாசிட் காலி, டெபாசிட் காலி!” என்று தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார்.

​இந்தத் எதிர்பாராத கோஷத்தைக் கேட்டு அங்கிருந்த செய்தியாளர்களும், வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்களும் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். ஒரு பக்கம் கூட்டணி மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து டிடிவி தீவிரமாகப் பேச முயல, பின்னால் நின்ற நிர்வாகி செய்த இந்தச் செயல் மொத்தச் சந்திப்பையும் வேடிக்கையாக மாற்றிவிட்டது. எடப்பாடி பழனிசாமியைச் சீண்டும் விதமாக அந்த நிர்வாகி காட்டிய அதீத உற்சாகம் இப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம தீனியாக அமைந்துள்ளது.