தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஏற்கனவே முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நேரத்தில் 127 பேர் கொண்ட மெகா பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் அதிமுக தரப்பில் இதுவரை மொத்தம் 150 வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இபிஎஸ் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல்.
– மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.#TNElections2026#Vote4AIADMK #EPSfor2026 pic.twitter.com/wtEHyylHld
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) March 27, 2026
இன்று வெளியாகியுள்ள இந்த 127 பேர் கொண்ட பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதுமுகங்களுக்குச் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், அதிமுகவின் இந்த அதிரடிப் பட்டியல் அறிவிப்பு அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) March 27, 2026
