தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் இன்று (ஜன 06) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றில் குளிப்பதையோ, கரையோர பகுதிகளுக்கு செல்வதையோ, தவிர்க்கும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.