இப்போதெல்லாம் அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக உள்ளார்கள். மின்வாரியம், வருவாய்த்துறை மட்டுமல்லாமல் பல துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்றே சொல்லலாம். அவ்வப்போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மேலிடம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் லஞ்சம் பெறுவது இன்னும் குறையவே இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில் லஞ்சம் பெறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின் சேவை தொடர்பான பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து, லஞ்சம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் அவர்கள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.