திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், அரசியல் பக்குவம் குறித்து மிக ஆழமாகப் பேசினார். அவர் கூறுகையில், “பொதுவாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது மிகவும் சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும், அதுதான் உண்மையான அரசியல். இந்த பக்குவம் மற்ற யாரையும் விட திமுகவினராகிய நமக்குத்தான் அதிகம் இருக்கிறது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

​மேலும் மற்ற கட்சிகளைச் மறைமுகமாகச் சாடிய அவர், “தேர்தல் தோல்விக்குப் பிறகும் மற்ற கட்சிகளைப் போல நமது எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்டிலோ அல்லது நட்சத்திர விடுதிகளிலோ ஒளித்து வைக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படவில்லை. அந்த பயம் இல்லாமல் தோல்வியிலும் நாம் தைரியமாகவே இருந்தோம்” என்று குறிப்பிட்டார். பின்னடைவு ஏற்பட்டாலும் கட்சியின் கட்டுக்கோப்பு சிதையவில்லை என ஸ்டாலின் பேசிய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.