நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு தனியார் பள்ளியில் 8 மற்றும் 6 படிக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களது மகள்களுக்கு முறையே 13 மற்றும் 11 வயதாகிறது. இதில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது போது வழக்கம். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி 13 வயது சிறுமி மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த தாய் தன்னுடைய மகளிடம் விசாரித்த போது அவர் சொன்ன தகவல்களை கேட்டு கலங்கி போய்விட்டார். அதாவது பக்கத்து வீட்டை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் சிறுமியிடம் தன்னுடைய வீட்டில் தண்ணீர் வருவதாகவும் சீக்கிரம் வந்து பிடித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அதை நம்பி சிறுமி தண்ணீர் பிடிக்க சென்றபோது ஒரு ஆளில்லாத கட்டிடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கத்த முயற்சித்த போது அவரது வாயை பொத்தியதோடு இது பற்றி வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் சிறுமி பயந்து போய் யாரிடமும் விஷயத்தை கூறாமல் இருந்த நிலையில் தற்போது தன் தாயிடம் நடந்ததை கூற அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.