மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ரௌலி மாவட்டத்திலுள்ள சிர்வாய் கலா கிராமம் பகுதியில் வசிக்கும் ஒரு 10 வயது சிறுவன், தனது தாயாரிடம் ர. 20-க்கு குர்குரே சிப்ஸ் வாங்கக் கேட்டிருக்கிறான். இதில் ஏற்பட்ட சண்டையில், தாயும் சகோதரியும் அவனை கயிறில் கட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வருந்திய அந்தக் குழந்தை, நேராக 112 எமர்ஜென்சி எணுக்கு அழைத்து, காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளான்.
அந்த நேரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர் உமேஷ் விஸ்வகர்மா, குழந்தையின் அழுது பேசும் குரலையும் வேதனையையும் கேட்டுவிட்டு, மெதுவாக ஆறுதல் கூறினார். பின்னர், சம்பவ இடமான சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று, தாயும் சகோதரிக்கும் அறிவுரை வழங்கினார்.
மேலும் குழந்தையின் உணர்வுகளை மதித்து, காவலர் உமேஷ், சிறுவனுக்கு குர்குரே பாக்கெட்டைக் பரிசாக வழங்கி, அவரது முகத்தில் சிரிப்பை திரும்பப் பெற்றதோடு, ஒரு சின்ன பயணத்தால் பெரிய மனிதநேயத்தையும் வெளிப்படுத்தினார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு, போலீசாரின் செயலை பிரமிப்புடன் பாராட்டும் கமெண்டுகளையும், “காவல்துறையில் உள்ள மனிதநேயம் இவ்வளவு அழகாக வெளிப்படும்?” என வியக்கும் கருத்துகளையும் பெறுகிறது.
