பாம்பு ஒன்று, அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு பாம்பை விழுங்கும் திகிலூட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியைப் பார்த்த பலரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இயற்கையின் கொடூரமான தரிசனங்களை நேரில் காணும் வாய்ப்பு அடிக்கடி ஏற்படாது. ஆனால் சமீபத்தில் எக்சில்  பகிரப்பட்ட ஒரு வீடியோ, பலரை வியப்பிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், ஒரு பெரிய பாம்பு, அதே இனத்தைச் சேர்ந்த சிறிய பாம்பை உயிருடன் விழுங்குவது தெளிவாக காணப்படுகிறது.

 

காணொளியில், ஒரு பாம்பு மற்றொரு பாம்பை பாதி வரை விழுங்கிய நிலையில் இருப்பது காணப்படுகிறது. மற்ற பாகம் வெளியே தொங்கிக் கொண்டிருப்பது பயமுறுத்தும் காட்சியை உருவாக்குகிறது. இது எலி, தவளை போன்ற வழக்கமான இரையல்ல, பாம்பின் சொந்த இனத்தைச் சேர்ந்த உயிர் தான் என்பதுவே அதிர்ச்சியை கூட்டுகிறது.

வலிமையான பசி அல்லது ஆதிக்கம் போன்ற காரணங்களால், சில பாம்புகள் தங்களது இனத்தினரையே வேட்டையாடும் வழக்கமுள்ளதாக உயிரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, உணவுப் பற்றாக்குறையிலும், சில பாம்பு இனங்களுக்கு இது சாதாரணமாகக் காணப்படும் நிகழ்வாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த காணொளி, ட்விட்டரில் @TheeDarkCircle என்ற பயனரால் பகிரப்பட்டு, இதுவரை 56,000-க்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் லைக் செய்து, தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.