நகைச்சுவை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் நடிகர் செந்தில், தனது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் பீமரத சாந்தி விழாவைக் கொண்டாடியுள்ளார். பொதுவாக 70 வயது பூர்த்தியாகி 71-வது வயதில் காலடி எடுத்து வைக்கும் போது நடத்தப்படும் இந்த வைபவம், செந்திலின் இல்லத்தில் மிகுந்த ஆச்சாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் நடைபெற்றது.

மேலும் நீண்ட காலமாகக் கோடிக்கணக்கான மக்களைத் தனது தனித்துவமான நகைச்சுவையால் சிரிக்க வைத்த செந்தில், இந்தத் தருணத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து ஹோமங்கள் மற்றும் வழிபாடுகளை மேற்கொண்டார்.

இந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகளைப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “எங்களை இத்தனை ஆண்டுகள் சிரிக்க வைத்த மகா கலைஞன் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.