மும்பையில் உள்ள ஈரான் தூதரகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில், அக்ஷய் ஆனந்த் என்ற இந்திய இளைஞர் “உங்கள் குழுவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா?” என்று ஜாலியாகக் கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது. பொதுவாக அரசு அலுவலகங்கள் இதுபோன்ற கேள்விகளைப் புறக்கணிக்கும், ஆனால் ஈரான் தூதரகம் மிகவும் கண்ணியமாகவும் நகைச்சுவையாகவும் பதிலளித்தது.

தற்சமயம் காலிப் பணியிடங்கள் இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்திய நண்பர்களைச் சேர்த்துக்கொள்வது நல்ல யோசனை என்றும் அவர்கள் குறிப்பிட்டது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. தூதரகத்தின் இந்த அன்பான பதில் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
<a href=”http://

“>

இதைப் பார்த்த மற்ற பயனர்களும் தங்களுக்குத் தெரிந்த மொழிகளைப் பட்டியலிட்டு, தங்களையும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறு வேடிக்கையாகக் கேட்டு வருகின்றனர்.

சர்வதேச அளவில் பதற்றமான சூழல்கள் நிலவினாலும், இதுபோன்ற நட்புரீதியான உரையாடல்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.