உத்தரகாண்ட் மாநிலத்தில் புனிதமான கங்கை ஆற்றின் கரையில், அரியானாவிலிருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிகேஷ் ஒரு புனிதத் தலம் என்பதால் அங்கு மது மற்றும் அசைவ உணவுகளுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி மது அருந்திய அந்தப் பெண்ணை அங்கிருந்த உள்ளூர் மக்களும் போலீசாரும் தடுத்து நிறுத்தி எச்சரித்தனர். அப்போது அந்தப் பெண் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
<a href=”http://

“>

இந்த வாக்குவாதத்தின் போது, “நாங்கள் சுற்றுலா வருவதால் தான் உங்களுக்கு வாழ்வாதாரமே கிடைக்கிறது; நீங்கள் சம்பாதிக்கும் பணத்தைத் தான் நாங்கள் மதுவாகக் குடிக்கிறோம்” என்று அந்தப் பெண் திமிராகப் பேசியுள்ளார்.

போலீசாரின் எச்சரிக்கையை மதிக்காமல் அதிகாரத்தோடு பேசிய அந்தப் பெண், பின்னர் தனது கணவருடன் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். புனிதத் தலத்தின் மாண்பைக் குறைக்க முயன்றதோடு, தட்டிக்கேட்ட போலீசாரையே அந்தப் பெண் இகழ்ந்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.