பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் அல்-சிசியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அப்போது இருவரும் ஆசிய கண்டத்தில் மோசமாகி வரும் மனிதத்துவ முரண்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நரேந்திர மோடி அவர்கள் தனது X பக்கத்தில் வெளியிட்ட குறிப்பில் “ஆசியாவின் மேற்கு பகுதியில் மோசமாகி வரும் மனிதத்துவ சூழல் மற்றும் பாதுகாப்பு குறித்து பகிர்ந்து கொண்டோம் வன்முறை, பயங்கரவாதம், மக்களின் உயிரிழப்பு போன்ற கவலைகளையும் பகிர்ந்தோம். விரைவில் மனிதத்துவ உதவிகளை செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி உடன்பாடு செய்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.