பொதுவாக குழந்தைகள் என்றாலே சத்தமிடுவது, ஓடி விளையாடுவது, அழுது அடம்பிடிப்பதும் என்பது வழக்கம். அதுவும் வெளி இடங்களுக்கு சென்றுவிட்டலாலே அவர்களின் சேட்டை இன்னும் அதிகமாகும். அவர்களை சமாளிப்பதே பெரும் வேலையாகி விடும். இந்த நிலையில் இதனை பயன்படுத்தி ஒரு உணவகம் கல்லா கட்டி வருகிறது.ஆம்  இப்படி உங்கள் குழந்தை செய்தால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அட்லாண்டாவில் உள்ள Toccoa riverside உணவகம் கூறுகிறது.

குழந்தைகள் சேட்டை செய்தாலோ. கூச்சலிட்டாலோ Bad Parenting என்று அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் உடன் இருப்பவர்களுடன் உணவை பகிர்ந்து கொண்டால் அதற்கு 3 டாலர் வசூலிக்கிறது