வேலூர் மாவட்டம் கௌரவ பேட்டை பகுதியில் பிரேம்குமார்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 11 மாதத்தில் இசை பிரியா என்ற ஒரு குழந்தையும் இருந்துள்ளனர். இவருடைய கணவர் பிரேம்குமார் ஆயுத பூஜைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் வேலைக்காக சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சங்கீதா நேற்று திடீரென அருகில் உள்ள விவசாய கிணற்றில்  தன் குழந்தைகள் இருவரையும் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த மாமனார் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டனர். ஆனால் சங்கீதா மற்றும் 5 வயது குழந்தை அதியமான் உயிரிழந்து விட்டனர். கரையோரம் காயங்களுடன் கிடந்த 11 மாத  குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சங்கீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.