சென்னை மாவட்டத்தில் உள்ள ஏகாட்டூர் ஓ.எம்.ஆர் சாலையில் 40 மாடிகள் உடைய தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு யாங் கியூ லிங் என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவர் மறைமலைநகரில் இருக்கும் கொரிய நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். அவரது மகன் சினோ லிம் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பன்னாட்டு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, மகள் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த வாரம் வேலை விஷயமாக யாங் கியூ லிங் தென் கொரியா சென்று விட்டார்.

நேற்று காலை மாடியில் இருந்து குதித்து சினோ லிம் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மாணவனின் வீட்டில் இருந்த கடிதத்தை கைப்பற்றினார். அந்த கடிதத்தில் மாணவன் கொரிய மொழி எழுதி இருந்தார். அதனை போலீசார் தமிழில் மொழி பெயர்த்த போது, வீட்டில் நானும் எனது தங்கையும் உள்ள நிலையில் எனது அம்மா தங்கையை மட்டுமே கவனித்து கொள்கிறார். தன்னை கவனிக்காமல் அலட்சியம் செய்வதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.