கேரள மாநிலம் மலப்புரத்தில் ஊருக்குள் காட்டு யானை புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த பால் ஏற்றி சென்ற வாகனத்தை காட்டு யானைகள் தாக்கியது.

இதனால் இரண்டு பேர் காயமடைந்தனர். ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதுவரை பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காட்டு யானை வாகனத்தை தாக்கிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது.