கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொழுவூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் கவுசிக், இன்று காலை பள்ளிக்கு செல்லும்போது வீட்டின் வெளியே இருந்த தனது ஷூவை அணிவிக்க முயன்ற போது, அதில் மறைந்திருந்த பாம்பு திடீரென கடித்தது.

இதனால் மயக்கம் அடைந்த சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு  கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொழுவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.