குஜராத் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் ரோஷ்னி (18) மற்றும் ஜோஸ்னா (20) ஆகியோர், சானியா கிராமத்தில் உள்ள ஒரு கோவில் குளியலறையில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தனர். பள்ளிப் பருவத்திலிருந்தே நெருங்கிய தோழிகளான இவர்கள், கல்லூரிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர்.
கோவிலில் இருந்த அவர்களது மொபட் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு காலி மயக்க மருந்து பாட்டில்களும் சிரிஞ்சுகளும் கிடந்தன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொள்வது எப்படி என்பது குறித்து அந்த மாணவிகள் ஏ.ஐ. சாட்ஜிபிடி மூலம் தகவல்களைச் சேகரித்தது அவர்களது செல்போன் வாயிலாகத் தெரியவந்துள்ளது. தற்கொலை தொடர்பான புகைப்படங்களும் அவர்களது போனில் இருந்துள்ளன.
எதற்காக இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உயயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்துடன் தொழில்நுட்பத்தைத் தவறாகப்பயன்படுத்திய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
