கடைக்கு பொருட்கள் வாங்குவது போல சென்று கடை உரிமையாளர்கள் அசந்த நேரத்தில் திருட்டு செயலில் ஈடுபடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட ஒரு நகைக்கடையில் நான்கு பெண்கள் நகை வாங்குவது போல சென்று வெள்ளி கொலுசுகளை திருடி சென்ற வீடியோ வைரலானது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒரு கடையின் முன் பகுதியில் ஸ்பீக்கர் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக வந்த வாலிபர் அந்த ஸ்பீக்கர் பாக்ஸை எடுத்து லுங்கிக்குள் போட்டுக்கொண்டு எதுவும் தெரியாதது போல கடைக்காரரிடம் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
சிறிது நேரம் கழித்து ஸ்பீக்கர் பாக்ஸ் காணாமல் போனதை அறிந்த கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர். அவர் நைசாக ஸ்பீக்கர் பாக்சை எடுத்து லுங்கிக்குள் போட்டு விட்டு அங்கிருந்து சென்ற சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
