தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலையில் செல்லும் பொது மக்களையும் தெருவில் விளையாடும் குழந்தைகளையும் தெரு நாய்கள் கடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே ஒரு தெரு நாய் சாலை கடக்க முயன்ற போது சரக்கு வாகனத்திலும், காரிலும் மோதி விபத்துக்குள்ளானது.
சிறிது நேரத்திலேயே எழுந்த அந்த நாய் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்ணின் காலை பிடித்து கடித்தது. அந்த பெண் வாகனத்தை நிறுத்தாமல் சென்றபோதிலும் நாய் விடாமல் அவரது காலை கடித்து கொண்டிருந்தது. சில நொடிகளில் அந்த பெண்ணின் காலை விட்டு விட்டு நாய் சாலைடை கடந்து சென்றது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Karaikal | #Dog | #CCTV | #Accident pic.twitter.com/FrYfksLUwO
— PttvOnlinenews (@PttvNewsX) July 29, 2025
