அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நரேந்திர மோடி ஒரு சிறந்த பிரதமர்… அவர் எப்போதும் எனக்கு நண்பர்தான்” எனக் கூறியிருந்தார். மேலும், இந்தியா – அமெரிக்கா உறவு குறித்து, “இரு நாடுகளுக்கும் சிறப்பு உறவு உள்ளது. அதில் கவலைப்பட வேண்டிய எதுவும் இல்லை. சில நேரங்களில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்” என அவர் தெரிவித்திருந்தார்.
டிரம்பின் இந்தக் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்துள்ளார். “அமெரிக்க அதிபர் டிரம்பின் உணர்வுகளையும், இந்தியா உடனான உறவுகள் குறித்த சாதகமான மதிப்பீட்டையும் ஆழமாக பாராட்டுகிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான கூட்டாண்மையையும், சிறப்பான உறவையும் கொண்டுள்ளன” என மோடி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம், இரு நாடுகளின் உறவுகள் சர்வதேச அரங்கில் மீண்டும் முக்கியத்துவம் பெறுவதை வெளிப்படுத்துகிறது.
