உலகையே சிரிக்க வைத்த மீம்ஸ் நாயகன் சீம்ஸ்  நாய் மரணம் அடைந்தது. நெட்டிசன்கள் மத்தியில் சீம்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் வைரல் நாய் உயிரிழந்துள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். மீம்ஸ் மூலமாக உலகம் முழுவதிலும் பிரபலமடைந்துள்ள சீம்ஸ் உயிரிழந்த தகவல் நெட்டிசன்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனினும் சீம்ஸை வளர்த்து பராமரித்து வந்த அதன் உரிமையாளர் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் அனைவரின் இதயத்திலும் சீம்ஸ் வைரல் நாயகனாக நினைவு கூறப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுவரை சீம்ஸ் உயிரிழந்ததற்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை.