ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்கள் கடந்தும் போர் பதட்டம் தனியவில்லை. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் வடகிழக்கு பகுதியான செர்னிஹிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் ஆறு வயது சிறுமி உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலினால் 100 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு போர் தொடங்கி முதல் முறையாக ஸ்வீடன் நாட்டிற்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.