அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் ஏற்பட்ட காட்டு தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை அப்பகுதியில் பரவத் தொடங்கிய காட்டுத்தீக்கு 19000 வீடுகள், கடைகள் 271 கட்டுமானங்கள், வரலாற்று சிறப்புமிக்க லஹேனா நகரம், இந்தியாவிலிருந்து பரிசாக வழங்கப்பட்ட 150 வருட பழமை வாய்ந்த ஆலமரம் போன்றவை இறையாகி உள்ளது. இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 87 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.