பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தொடரப்பட்ட தோஷ்கானா வழக்கு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான் கானின் உதவியாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷா மக்மூத் குரேஷி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்களில் ஷா கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.