அபுதாபி சர்வதேச கண்காட்சியில் அபூர்வ அமெரிக்க பருந்து ஒன்று வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பருந்து ஒரு மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 076 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெள்ளை நிற பருந்தை சொந்தமாக வாங்குவதற்கு பலரும் வந்த நிலையில் இந்த ஏலத்தை எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் ஏற்பாடு செய்தது.

பருந்து பிரியர்களின் முக்கிய இயல்புகளில் ஒன்று தான் இந்த ஏலம். பருந்து வளர்ப்பு பண்ணைகள் மற்றும் மையங்களில் உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த பால்கன்களை பெறுவார்கள். இந்த ஏலம் சமூக ஊடகங்களிலும் அமைப்பாளர்களின் அதிகார பூர்வ இணையதளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.