பிரேசிலை சேர்ந்த 127 வயதான ஜோஸ் பாலினோ என்ற உலகின் வயதான மனிதர் காலமானார். ஒரு வாரத்தில் ஜோஸ், தனது 128வது வயதை அடைய இருந்த நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துள்ளார். 1895ல் பிறந்ததாக கூறப்படும் ஜோஸ், 2 உலகப்போர் மற்றும் 2 பெருந்தொற்றுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அவரது பிறந்த தேதிக்கான எந்த ஆதாரமும் இல்லாததால், கின்னஸ் ரெக்கார்டில் ஜோஸ் பெயர் இடம்பெறவில்லை
