பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் 1904 -ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி பிறந்தவர் லூசில் ராண்டன். இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் ஆசிரியராக பணியாற்றி 40 வயதில் கன்னியாஸ்திரி ஆனார். அதன் பின் இவரை எல்லோரும் சிஸ்டர் ஆண்ட்ரே என அழைத்து வந்தனர். இவர் தன்னுடைய 75 ஆவது வயதில் ஓய்வு பெற்று பல்வேறு முதியோர் இல்லங்களில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தார். கடைசியாக பிரான்சின் டவுன்லோட் நகரில் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு கடந்த 2009 -ஆம் ஆண்டு சென்றுள்ளார். ஐரோப்பாவில் வாழும் மிகவும் வயதான பெண்ணாக அறியப்பட்டு வந்த லூசில் கடந்த ஏப்ரல் மாதம் 119 வயதான ஜப்பானின் கேன் டனாகா மறைவுக்குப் பின் உலகின் வயதான பெண்ணாக மாறினார்.

இவர் 1918 -ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு தன்னுடைய ஆயுளை காப்பாற்றிக் கொண்டார். இதனையடுத்து கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு ஆளானார். லூசில் இருந்த முதியோர் இல்லத்தில் 10 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான நிலையில் இவர் மட்டும் கொரோனாவில் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்துள்ளார் என அவர் தங்கி இருந்த முதியோர் இல்லத்தின் செய்தி தொடர்பாளர் டேவிட் டவேலா உறுதிப்படுத்தியுள்ளார்‌. லூசில் மறைவுக்கு பிரான்ஸ் மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.