34 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கிய நடிகருக்கு மோசமான நரம்பு தளர்ச்சி பாதிப்பு உள்ளதால் அவர் விசாரணைக்கு மனதளவில் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆபாச திரைப்படங்களின் கனவு நாயகனாக 1970 ஆம் ஆண்டுகளில் வலம் வந்த ரான் ஜெர்மி இதுவரை 2000-திற்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான 5 வருடங்களில் 30க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

அவர்களில் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் ரான் ஜெர்மி கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இவரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மோசமான நரம்பு தளர்ச்சி பாதிப்பு உள்ளதால் அவர் விசாரணைக்கு மனதளவில் தகுதியற்றவர் என்று நீதிபதி தெரிவித்தார். அதனால் இவ்வழக்கின் விசாரணை பிப்ரவரி 7-ம் தேதி ரான் ஜெர்மி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நடைபெறும் என்று உத்தரவிட்டார்.