உலகில் மிக வயதான நபரான லூசில் ராண்டன் மரணத்தை தழுவினார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 118. முதலாம் உலகப்போர் தொடங்குவதற்கு 10 வருடங்களுக்கு முன்பே பிறந்த இவர் கிறிஸ்துவ சிஸ்டராக சேவை செய்து வந்தார். 41 வயதில் கன்னியாஸ்திரி ஆக மாறிய இவர் 77 ஆண்டு காலம் பொது சேவை செய்துள்ளார். அதிக காலம் வாழ்ந்தவர் என்ற பெருமையைப் பெற்ற கேன் தனகாவின் (119) வயதை லூசி ஒரு ஆண்டில் தவறவிட்டார். அவர் இன்று உயிரிழந்த நிலையில் அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.