பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. மற்றொருபுறம், ‘ஜமாத்-உல்-அஹ்ரார்’ என்ற பயங்கரவாத அமைப்பு, வெளிநாட்டு வீரர்களுக்கு பகிரங்கமாக மரண எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் டேரில் மிட்செல் போன்ற முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் வரக்கூடாது என்றும், மீறி வந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்தந்த கிரிக்கெட் வாரியங்களே பொறுப்பு என்றும் மிரட்டியுள்ளது. இந்தக் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களைப் பாகிஸ்தான் அனுப்பத் தயாராக உள்ளது.


முஸ்தபிசுர் ரஹ்மான், நஹித் ராணா உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடத் துணிந்துள்ளனர். “நாங்கள் பாகிஸ்தான் செல்லத் தயார்” என வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா அதிரடியாக அறிவித்துள்ளார். மற்ற நாட்டு வீரர்கள் பாதுகாப்பு கருதி பின்வாங்கும் நிலையில், வங்கதேச வீரர்களின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.