அமெரிக்காவை சேர்ந்த பமீலா நான்ஸ் என்ற பெண், தான் இறந்து நான்கு நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பிழைத்து வந்ததாகக் கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 1990-ம் ஆண்டு, 22 வயதாக இருந்தபோது பமீலாவுக்கு ஏற்பட்ட கடுமையான வயிற்று இரத்தக் கசிவு காரணமாக, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

ஆனால், அந்த நான்கு நாட்களும் தனது ஆன்மா வேறொரு உலகிற்குச் சென்றதாகவும், அங்குள்ள வர்ணிக்க முடியாத அழகான காட்சிகளையும், தன்னிடம் பேசிய ஒரு பிரம்மாண்ட மரத்தையும் கண்டதாக அவர் சிலிர்ப்புடன் கூறுகிறார். இந்த விசித்திரப் பயணத்தின் போது, பமீலா உயிரிழந்த தனது வளர்ப்பு நாயையும், ஒரு பௌத்த துறவியையும் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். அந்தத் துறவி அவருக்கு வாழ்க்கையின் ரகசியங்களைப் போதித்ததாகவும், அதன் பின்னரே அவர் மீண்டும் உயிர் பெற்றதாகவும் கூறுகிறார்.

ஐந்து நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு கண்விழித்த பமீலா, மரணம் என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்றும், நாம் அனைவரும் அன்பால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும் தற்போது உலகிற்குத் தெரிவித்து வருகிறார். இவரது இந்தக் கதை ஒரு சினிமா படத்தைப் போல அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.