சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திடுக்கிடும் வீடியோவில், நபர் ஒருவர் உலகின் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ராஜநாகத்தை எந்தவித அச்சமுமின்றி தனது கழுத்தில் சுற்றிக்கொள்ளும் காட்சி காண்போரை உறைய வைத்துள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, மற்ற இருவர் உதவியுடன் அந்த பிரம்மாண்டமான பாம்பைப் பிடித்து அவரது கழுத்தில் ஒரு மஃப்ளர் போல சுற்றுகின்றனர்.
ஒரு கட்டத்தில் அந்தப் பாம்பு ஆக்ரோஷமாக அவரைத் தாக்க முயன்ற போதிலும், அவர் லாவகமாக அதைச் சமாளிக்கும் விதம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, இதுவரை 44 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
மேலும் ராஜநாகத்தின் ஒரு சிறு தீண்டல் கூட சில மணிநேரங்களில் மரணத்தை விளைவிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், இது போன்ற ஆபத்தான சாகசங்கள் தேவையற்றது என்றும், இது துணிச்சலல்ல, வெறும் முட்டாள்தனம் என்றும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், அந்த நபரின் அசாத்தியமான தைரியத்தைக் கண்டு வியந்து பாராட்டுபவர்களும் இணையத்தில் குறைந்தபாடில்லை.
