கடற்கரையில் அலைகள் சீறிப்பாயும் வேளையில், வாய் பிளந்து நிற்கும் ஒரு பிரம்மாண்ட ராட்சத மீன், ஒரு நபரை பாதியளவு விழுங்கிய நிலையில் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பார்ப்போரை உறைய வைத்துள்ளது. ஹாலிவுட் திகில் படக் காட்சிகளையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோவில், மீனின் வாய்க்குள் சிக்கிக்கொண்ட அந்த நபரை மீட்க, அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடுகின்றனர். அலைகளின் சீற்றத்திற்கு மத்தியிலும், அந்த நபரை மீனின் பிடியிலிருந்து அவர்கள் பத்திரமாக இழுத்து எடுக்கும் காட்சிகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.

 

View this post on Instagram

 

A post shared by 🌎 WORLDWIDE REEL HUB (@worldwidereels.io)

மீட்கப்பட்ட நபர் மயக்க நிலையில் கரை ஒதுங்கும் அந்த நொடி, பார்ப்பவர்களுக்கு பெரும் நிம்மதியைத் தந்தாலும், இந்தப் பயங்கரக் காட்சி உண்மையானதா என்ற விவாதம் தற்போது இணையத்தில் சூடுபிடித்துள்ளது. இது அதிநவீன ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இயற்கையின் சீற்றமும் விபரீதமும் எந்த ரூபத்தில் வரும் என்பதற்கு இந்த வைரல் காட்சி ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.